இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் சாதனையை ஜஸ்பிரீத் பும்ரா முறியடித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில், தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் வீழ்த்திய பும்ரா, கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார்
டெஸ்ட் இன்னிங்ஸில் பும்ரா 5 விக்கெட்கள் எடுப்பது இது 12ஆவது முறையாகும். அதேசமயம் ஆசிய கண்டத்துக்கு வெளியே அவர் ஓர் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் வீழ்த்தியது இது 10ஆவது முறையாகும்.
இதற்கு முன்பு இந்திய பந்து வீச்சாளர்களில் கபில்தேவ், ஆசியாவுக்கு வெளியே 9 முறை 5 விக்கெட்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
அந்தச் சாதனையை பும்ரா தற்போது முறியடித்துள்ளார்.