கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 3 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை உந்துருளியில் வருகை தந்த இருவர், உந்துருளி உதிரிப்பாக விற்பனை நிலையத்திலிருந்து இருவரை இலக்கு வைத்து இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் கட்டுகஸ்தர மற்றும் யக்கல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.