கம்பஹா நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோட்டுகொட, மதுருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த அப்புஹாமிலாகே காமினி பியத்திலக்க திசேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பஸ் பொட்டா என்ற நபர் அன்றைய தினமே உயிரிழந்த நிலையில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அதில் ஒருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சமன் பத்திரண தெரிவித்துள்ளார்.