கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,327 ஆக உயர்வடைந்துள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று(7) காலையுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்தில் 444 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, கம்பஹா மாட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.
மாவட்டத்தின் 15 சுகாதார பிரிவுகளில் 444 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்தனகல்ல பிரிவில் 60 பேரும் வத்தளையில் 51 பேரும், மீரிகம 44, தொம்பே மற்றும் மஹர பிரிவுகளில் 41, கம்பஹா 34, களனிய 29, சீதுவ 20, ஜாஎல மற்றும் திவுலப்பிட்டியவில் 17, மினுவாங்கொடையில் 6, ராகமையில் 2, கட்டானையில் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
24 மணித்தியாலத்துக்குள் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் 248 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
17,811 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலைகளில் 61 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 42 பேர் கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 18 பேர் ஏனையத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் என்று பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 292,448 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.