கம்பஹா மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

0
196

கடந்த 24 மணித்தியாலங்களில் கம்பஹா மாவட்டத்தில் 687 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.

பியகம பொதுசுகாதார பிரிவிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 90 பேர் நேற்றைய (15) தினம் இந்த பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் மஹர பிரிவில் 81 தொற்றாளர்களும் தொம்பேயில் 78 தொற்றாளர்களும் ராகம பிரிவில் 63 தொற்றாளர்களும் கட்டான பிரிவில் 50 தொற்றாளர்களும் களனிய பிரிவில் 46 தொற்றாளர்களும் நீர்கொழும்பில் 41 தொற்றாளர்களும் வத்தளை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் 39 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

மீரிகமையில் 30 பேரும் திவுலப்பிட்டிய மற்றும் ஜாஎல ஆகிய பிரிவுகளில் 27 பேரும் அத்தனகலயில் 25 பேரும் மினுவான்கொட பிரிவில் 8 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று (15) காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 354 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.

இதுவரை 33,575 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.