ஹைட்டி நாட்டின் மீதான ஆயுதத் தடையை மேலும் கடுமையாக்கும் தீர்மானம் ஐ.நா பொதுச்சபையில் உறுப்பு நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கரீபியன் தீவு நாடான ஹைட்டி அதிபராக இருந்த ஜொவனேல் மோய்ஸ் 2021ல் படுகொலை செய்யப்பட்ட பின்னர், அந்நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்தன.
அண்மையில் அந் நாட்டின் தலைநருக்கு அருகே உள்ள பொன்ட் சோண்டே நகரில் வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் 115 அப்பாவி பொதுமக்கள்
கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஹைட்டி மீதான ஆயுத தடையை மேலும் கடுமையாக்க ஐநா பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அனைத்து வகையான ஆயுதங்கள், வெடிபொருட்களுக்கும் தடை விதிக்கும் தீர்மானத்தை 193 உறுப்பு நாடுகளும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டன. இதன் மூலம் எந்த ஆயுதமும் வன்முறை கும்பலிடம் சேராமல் தடுக்க முடியும் என ஐநா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.