நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘உருட்டு உருட்டு’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ உருட்டு உருட்டு’ எனும் திரைப்படத்தில் கஜேஷ் நாகேஷ் , ரித்விகா ஸ்ரேயா ,மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், பத்ம ராஜு ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் பால்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருணகிரி – கார்த்திக் கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். நகைச்சுவை படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சாய் காவியா- சாய் கைலாஷ் – பத்ம ராஜு ஜெய்சங்கர் – ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,” தற்போது சிறிய ஊர்களில் கூட கருத்தரிப்பு மையங்களை காண முடிகிறது. இதன் பின்னணி என்ன? என்பதை நகைச்சுவையுடன் விவரிப்பது தான் இப்படத்தின் கதை. ” என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் படக்குழுவினர் உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.