கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை பறிப்பதனூடாக நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது – ஜீ.எல்.பீரிஸ் எம்.பி

0
97

பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை பறிப்பதனூடாக நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாராமன்ற உறுப்பினர்களை அமைதிப்படுத்துவதனூடாக எந்த பிரச்சினைக்ளுக்கும் தீர்வு காண முடியாது. நாட்டில் கைவிடக்கூடிய பிரச்சினை இருக்கின்றதா என்றே கேட்விளைகின்றோம்.

விசேடமாக சிறுவர் மந்தபோசணை. மக்களின் பிரச்சினைகளை இந்த சபைக்கு கொண்டுவர வேண்டியது பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமையும் பொறுப்பாகும்.

அதனை தெரியப்படுத்துவதற்கு கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் மிகவும் அவசியமானது.

இந்த சபைக்கு வந்து சபாநாயகர் உட்பட நாட்டின் நிலைமையை தெரியப்படுத்துவதே பாராளுமன்ற ஜனநாயகமாகும்.

எனினும் இன்று இந்த சபையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேருக்கு கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் முழுமையாக இல்லாமல் போயுள்ளது.

திட்டமிட்ட வகையில் இந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 31ஆம் திகதியிலிருந்து இந்த பிரச்சினையை நாம் எதிர்கொண்டு வருகின்றோம்.

22 நாட்கள் இந்த பிரச்சினை தொடர்ந்து வருகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கருத்து தெரிவிப்பதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டியது அவசியமாகும்.

எனினும் இந்த 13 உறுப்பினர்களுக்குமான கால அவகாசம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று இந்த சபையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் ஒன்று இடம்பெற்றது.

அரசாங்கத்தின் வருமான மார்க்கத்தை அதிகரிப்பதற்கான உசிதமான உபாயமார்க்கங்கள் தொடர்பில் இங்கு கருத்துரைக்கப்பட்டது.

நாடு இன்று எதிர்கொண்டு இருக்கும் நெருக்கடிமிக்க பிரச்சினைகளை தவிர வேறு பிரச்சினைகள் குறித்த விவாதமே இங்கு அவசியம்.

நாட்டு மக்கள் தொடர்பில், பொருளாதாரம் தொடர்பில் நன்கு தெரிந்தவர்களே இந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்களும்.

கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாக இந்த 13 உறுப்பினர்களும் உள்ளனர்.

பேராசிரியரகள், சட்டத்தரணிகள், வைத்தியர்களாக இந்த 13 பேரும் உள்ளனர்.