எழுத்தாளர்கள், கலைஞர்கள், மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் கொரோனாத் தடுப்பூசிகள் வழங்க வேண்டிய அவசியமாக உள்ளதென இலங்கை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் ஓ.கே. குணநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் அபிவிருத்தியை விட உயிரைக்
காப்பதே தேவையாக உள்ளது என்று குறிப்பிட்டார்
மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் புதன்கிழமை பிற்பகல் (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.