கல்கிஸ்ஸை கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆணின் சடலம்!

0
4
Yellow crime scene do not cross barrier tape in front of defocused background. Horizontal composition with selective focus and copy space.

கொழும்பு – கல்கிஸ்ஸை கடற்கரை பகுதியில் நேற்று இரவு  ஆணொருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.