மட்டக்களப்பு பேத்தாழை பல நோக்கு மண்டபத்தில் பொலிஸ் நடமாடும் சேவையொன்று கல்குடா பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி சி.ஜ.சந்தனவிதானகே தலைமையில் நடைபெற்றது.இதில் பொது மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதுடன் குறிப்பாக தொலைந்து போன அடையான அட்டை,சாரதி அனுமதிப்பத்திரம்,பொலிஸ் நற்சான்றிதழ்,போன்றவற்றிக்கு உடன் பிரதிபலன்,முறைப்பாட்டு விசாரணை,சிறுமுறைப்பாட்டிற்கான தீர்வு காணப்பட்டது.
இன்றைய நிகழ்வில் சிறு குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகஸ்த்தர் எஸ்.ஜ.மர்சூத் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்த்தர் எஸ்.ஜ.வினோத் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரினரும் கலந்து கொண்டனர்.
156 ஆவது பொலிஸ் தின நிகழ்வுகள் கல்குடா பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, இதன் ஒரு நிகழ்வாக 10 ஆவது நாளான இன்று நடமாடும் சேவைகள் வழங்கப்பட்டது.இதேவேளை கடந்த வாரம் முதல் பிரதேசத்தில் மரம் நடுகை,பொது இடங்களில் சிரமதானம்,சிறுவர் பெண்கள் தொடர்பான துஸ் பிரயோகத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை,விளையாட்டு நிகழ்வுகள்,டெங்கு வழிப்புணர்வு நடவடிக்கை மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களின் சேவையினை பாராட்டி கௌரவித்தல் என பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.