கல்முனை அஹ்லுல் சுன்னத்துல் ஜமாத் உலமா சபையின் தலைமைத்துவப் பயிற்சி

0
199

அம்பாறை கல்முனை அஹ்லுல் சுன்னத்துல் ஜமாத் உலமா சபையினரால், கல்முனை பிரதேசத்தில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட மூன்று நாள் தலைமைத்துவ வழிகாட்டல் செயலமர்வினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுநேற்று இடம்பெற்றது.

கல்முனை முஹ்ஹையதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில், அஹ்லுல் சுன்னத்துல் ஜமாத் உலமா சபைத் தலைவர் மௌலவி தலைமையில் செயலமர்வு இடம்பெற்றது.
வளவாளர்களாகவும், அதிதிகளாகவும் கல்முனை வைத்தியசாலை மனோதத்துவ வைத்திய நிபுணர் டொக்டர் யு.எல். சறாப்தீன், கல்முனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், அஹ்லுல் சுன்னத்துல் ஜமாத் உலமா சபை செயலாளர் மௌலவி ஏ.எல். நாஸர், உளவளத் துணையாளர் என்.எம். நௌசாத், ஆசிரியர் எம்.வை.எம்.வை. இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன நல உளவியல், ஆன்மீகம், கல்வி வழிகாட்டல் போன்ற தலைப்புகளில் செயலமர்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.