கல்வித்துறை சார்ந்த விடயங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கு திட்டம்!

0
204

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அரச மற்றும் ஏனைய சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தில் கல்வித்துறை சார்ந்த விடயங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற தேசிய கல்வி நிறுவகத்தின் ஆசிரியர்களுக்கான மானியம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் தலைமையில் ஆசிரியர் நியமனங்கள் 8 மாகாணங்களுக்கு ஒரே நேரத்தில் வழங்கப்பட்டுள்ளன எனவும். மேல் மாகாணம் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கு மொத்தம் 2,355 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் தேசிய கல்வி நிறுவகத்தின் ஆசிரியப் பட்டயப் படிப்பு நான்கு வருடங்களாக நீடிக்கப்பட்டு பட்டப் படிப்பாக மேம்படுத்தப்படும் என்றும் டிப்ளோமா கற்கையை நிறைவு செய்த ஆசிரியர்களுக்குப் பட்டயப் படிப்பை தொடர சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.