கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை!

0
176

கல்வியற் கல்லூரிகளில் கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரியில், யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்களை சந்தித்து கல்வியமைச்சர் கலந்துரையாடினார். சந்திப்பின் போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண கல்வியமைச்சின் அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் என கல்வித்துறை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர். யாழ்.மாவட்ட பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடலின் போது கல்வியமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. வடமாகாண கல்வி அமைச்சு, வட மாகாண கல்விப் பணிப்பாளர்களின் அசமந்தப் போக்கு , இடமாற்ற கொள்கையினை சரியான முறையில் நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிப்பு செய்தல், தற்பொழுது ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சனை, போன்றவை தொடர்பில் அமைச்சருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்வைத்த கருத்துக்களைச் செவிமடுத்த கல்வியமைச்சர், எதிர்வரும் காலத்தில் யாழ் மாவட்டத்தில் பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் ஆளுணிப் பற்றாக்குறை என்பவற்றை தீர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார். துரப்பிரதேசங்களில் கல்வி நடவடிக்கைக்கு செல்லும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு உடனடியான தீர்வினை மாகாண கல்வி பணிப்பாளர்கள் ஊடாக பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை
எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.