கல்வி அதிகாரிகளை செயல்திறன் அடிப்படையில் கண்காணிப்பதற்கு புதிய முறை!

0
9

ஒவ்வொரு கல்வி அதிகாரியையும் செயல்திறன் அடிப்படையில் கண்காணித்து மதிப்பீடு செய்வதற்கான புதிய வழிமுறையை உருவாக்குவதில் விஞ்ஞானம் , தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. 

அண்மையில் நாடாளுமன்றத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவில், இது குறித்த மூலோபாய திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்தார். 

கிராமங்களுக்கு தொழிநுட்பங்களை கொண்டு செல்வதை நோக்காக கொண்டு கல்வி அதிகாரிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

இந்த கலந்துரையாடலின் போது இளநீரின் மேற்பகுதியைப் பயன்படுத்தி இயற்கை சாயங்களைத் தயாரிப்பதற்கான இரண்டு நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது