களனிதிஸ்ஸ மின்நிலையம் மீண்டும் இலங்கை மின்சார சபை வசம்!

0
167

தனியார் வசமுள்ள களனிதிஸ்ஸ மின்நிலையத்தை மீண்டும் இலங்கை மின்சார சபை கையகப்படுத்தியுள்ளது.

163 மெகாவோட் மின்னுற்பத்தி செய்யக்கூடிய குறித்த மின்நிலையம் தனியார் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வந்தநிலையில், கடந்த 28ஆம் திகதி மீண்டும் இலங்கை மின்சார சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆலையை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் (PPA) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் இந்த கையகப்படுத்தல் இடம்பெற்றுள்ளது.

இதன் மூலம் இலங்கையின் மின் உற்பத்தி நிலைய திறன் 163 மெகாவோட்டினால் அதிகரித்துள்ளது.