களனி கங்கையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல், மணல் அகழ்வில் ஈடுபட்ட எண்மர் கைது

0
107

கம்பஹா பூகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு மற்றும் மணல் அகழ்வில் ஈடுபட்ட எண்மரை மேல் மாகாண வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

போங்கமுவ, வெலிபென்ன, பூகொட மற்றும் கொஸ்கம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 18, 23, 30, 49, 50, 57 மற்றும் 68 வயதுகளையுடைய எண்மரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசேட விசாரணைகளையடுத்தே குறித்த எண்மரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.