பெல்ஜியம் நாட்டில் தெருக் களியாட்ட திருவிழா ஒன்றில் சாரதி ஒருவர் காரை வேகமாகச் செலுத்தித் தாக்கியதில் ஏழு பேர் உயிரிழந்தனர். இருபது பேர்வரை படுகாயமடைந்துள்ளனர்.
பெல்ஜியத்தில் மிகவும் பிரபலமான வருடாந்த தெருவிழாவிலேயே ஞாயிற்றுக்கிழமை விடிகாலை ஐந்து மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.
களியாட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒரு நாட்டுப்புறக் குழுவினர்மீது மிக வேகமாக வந்த கார் மோதியுள்ளது. குழந்தை உட்பட நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தென்பகுதி லா லோவிரேர் என்ற நகரத்தின் மேயர் தெரிவித்திருக்கிறார்.
படுகாயமடைந்தவர்க ளில் மூவர் அவசர சிகிச்சைகளின் போது உயிரிழந்தனர்.
களியாட்ட மக்கள் மீது காரைக் கண்டபடி செலுத்திய சாரதியைப் பொலிஸார் துரத்திச் சென்று கைதுசெய்தனர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பொலிஸாருடருடனான பகைமையோ அல்லது பயங்கரவாத நோக்கங்களோ இருப்பதாகத் தெரியவரவில்லை என்பதை விசாரணையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.