அனுமதியின்றி ஆறு கழுதைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி சாரதிகள் இருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தகுளிய பகுதியைச் சேர்ந்த இரண்டு பாரவூர்தி சாரதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் உள்ள கழுதைகளை கற்பிட்டி பிரதேச செயலாளரின் அனுமதியின்றி வேறு பகுதிக்குக் கொண்டு செல்வது சட்டவிரோதமானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்த கழுதைகள் படல்கம பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பு காணிக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்பிட்டி உதவி காவல்துறை அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்இ நுரைச்சோலை காவல்துறையினர் இந்த சந்தேக நபர்களைச் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.