காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் மருத்துவர் ஒருவரின் பத்து பிள்ளைகளில் 9 பிள்ளைகள் கொல்லப்பட்டனர்.
வைத்தியர் அலா அல் நஜார் என்பவரின் வீட்டை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் அவரது கணவரும் பிள்ளையொன்றும் காயமடைந்துள்ளனர் என நாசெர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மருத்துவரின் உயிர்பிழைத்த 11 வயது மகனிற்கு சத்திரசிகிச்சையை மேற்கொண்ட பிரிட்டிஸ் மருத்துவர் கிரேஸ் குரூம் குழந்தை மருத்துவராக குழந்தைகள் சிறுவர்களிற்கு பல வருடங்களாக மருத்துவசேவையாற்றிய தாயார் ஒருவர் தனது அனைத்து சொந்தங்களையும் இழக்க நேரிட்டது தாங்க முடியாத கொடுரம் என பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
வைத்தியரின் கணவர் கடும்காயங்களிற்குள்ளாகியுள்ளார்,தலையை குண்டுசிதறல்கள் தாக்கியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தந்தையும் மருத்துவர் நான் அவரிடம் கேட்டதற்கு அவர் தனக்கு அரசியல் இராணுவ தொடர்புகள் இல்லை சமூக ஊடகங்களில் நான் பிரபலமாகயில்லை என தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியர் அலால அல் நஜாரின் குடும்பத்தினை பொறுத்தவரை இது நினைத்து பார்க்க முடியாத நிலைமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாசின் மருத்துவ பிரிவினரால் வெளியிடப்பட்ட பிபிசியினால் உறுதி செய்யப்பட்ட வீடியோக்களில் ஹான்யூனிசின் இடிபாடுகளிற்கு இடையிலிருந்துn சிறிய எரியுண்ட உடல்கள் மீட்கப்படுவதை காண்பித்துள்ளன.
வைத்தியரின் கணவர் தனது மனைவியை மருத்துவமனையில்விட்டுவிட்டு வீட்டிற்கு வந்த ஒரிருநிமிடங்களில் அந்த வீடு தாக்குதலிற்குள்ளானது என ஹமாசின் சுகாதார அமைச்சின் இயக்குநர் வைத்தியர் முனீர் அல்போர்ஸ் தெரிவித்துள்ளார்.மூத்த மகனிற்கு 12 வயது என அவர் தெரிவித்துள்ளார்.