காசாவில் மகன்கள் கொல்லப்பட்ட செய்தி கேட்ட ஹமாஸ் தலைவரின் பிரதிபலிப்பு 

0
82

காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் மூன்று மகன்கள் கொல்லப்பட்ட தகவல் கத்தாரிலுள்ள அவருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் மௌனமாகி நின்மை தொடர்பான காணொளி எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்த தாக்குதலில் அரவது மூன்று மகன்களும், மூன்று பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்டனர்.

நாடு கடத்தப்பட்டு தற்போது அவர் கத்தாரில் வசித்து வரும் நிலையில்,  காயமடைந்த பலஸ்தீனியர்களைக் காண கத்தாரில் மருத்துவமனைக்கு வந்திருந்தபோது, அவரிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.அவரிடம் மகன்களும் பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதும், அவர் ஒரு வினாடி மௌனமடைந்து நிலத்தைப் பார்த்தார். பிறகு இறைவன் திருவடியை சேரட்டும் என்று பிரார்த்தித்தவாறு அவ்விடத்தைக் கடந்து சென்றார்.

இந்த தாக்குதலில், மூன்று பேத்திகளும் பேரன்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.