காசா நகரத்தினை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் உலகம் நாடுகள் வெளியிட்டுள்ள கண்டனத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
இஸ்ரேலை கண்டித்து தடைகளை விதிக்கப்போவதாக எச்சரிக்கும் நாடுகளால் எங்கள் உறுதிப்பாட்டை குலைக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் ஹட்ஸ் தெரிவித்துள்ளார்.
காசாவை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்திற்கு ஐநாவும் உலக நாடுகள் பலவும் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
ஜேர்மனி இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தை நிறுத்தியுள்ளது.
மோதல் மேலும் விரிவடைவது மேலும் பாரிய இடம்பெயர்வை உருவாக்கும்,மேலும் கொலைகளை மேலும் துயரத்தை அர்த்தமற்ற அழிவை இரத்தக்களறியை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஸ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் இது தவறான நடவடிக்கை மேலும் இரத்தக்களறியை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.