காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்

0
138

காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாத குழு மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில், காசா பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு காசா தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தினோம். இந்தத் தாக்குதலில் அவர்களின் முக்கிய நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டன. இது ஹமாஸ் தீவிரவாதிகளின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது. இஸ்ரேல் மக்களின் பாதுகாப்புக்கு வரும் எந்த அச்சுறுத்தலையும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து பாலஸ்தீனர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் ஹமாஸ் தீவிரவாதிகளும் இஸ்ரேலின் ஆதிக்கத்துக்கு எதிராக அவ்வப்போது தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, ஜெருசலமே இஸ்ரேலின் தலைநகரம் என்று அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வருகிறது இந்த நிலையில் மத்திய கிழக்குப் பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முழு வெளியுறவுத் தொடர்புகளை நிறுவுவதற்கான உடன்படிக்கை சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் மத்தியஸ்தராக அமெரிக்கா இருந்தது குறிப்பிடத்தக்கது.