காசா மக்களிற்காக குரல் கொடுத்தமைக்காக கைது செய்யப்பட்ட மொஹ்மூட் காலில்

0
6

நான் ஒரு அரசியல் கைதியில்லை எனது அரசியல் நம்பிக்கைகளிற்காக டிரம்ப் அரசாங்கம் என்னை இலக்குவைக்கின்றது என அமெரிக்க பல்கலைகழங்களில் பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டங்களிற்கு தலைமை தாங்கியமைக்காக கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள மஹ்மூட் காலில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் குடிவரவு துறை அதிகாரிகளால் நாடு கடத்தப்படுவதற்காக கைதுசெய்யப்பட்டுள்ள  காலில் கைதுசெய்யப்பட்ட பின்னர் முதல்தடவையாக அமெரிக்காவின் குடிவரவு தடுப்பு முகாம்களில் குடியேற்றவாசிகள் எதிர்கொள்ளும் நிலை குறித்து காலில்  தெரிவித்துள்ளார்.

கார்டியனிற்கு வழங்கியுள்ள பிரத்யேக  அறிக்கையில் கொலம்பியா பல்கலைகழக மாணவனான அவர் லூசியானா தடுப்பு முகாமிலிருந்து நான் இதனை எழுதுகின்றேன்,இங்கு நான் குளிர்மிகுந்த காலைகளில் கண்விழிக்கின்றேன்.சட்டத்தின் பாதுகாப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பலருக்கு எதிராக இழைக்கப்படும் அமைதியான அநீதிகளிற்கான சாட்சியங்களை நாள்முழுக்க பார்க்கின்றேன் என  தெரிவித்துள்ளார்.

கருத்துவேறுபாடுகளை மாற்றுக்கருத்துக்களை அடக்குவதற்கான பரந்துபட்ட மூலோபாயத்தின் அடிப்படையிலேயே டிரம்ப் நிர்வாகம் என்னை இலக்குவைக்கின்றதுஎன தெரிவித்துள்ள காலில். விசா உள்ளவர்கள். கிறீன்கார்ட் உள்ளவர்கள்.பொதுமக்கள் என அனைவரும் தங்கள் அரசியல் நம்பிக்கைகளிற்காக இலக்குவைக்கபடும் நிலை உருவாகும் என எச்சரித்துள்ளார்.

எனது கருத்துசுதந்திரத்திற்கான உரிமையை  நான் பயன்படுத்தியமையின் நேரடி விளைவே எனது கைது என தெரிவித்துள்ள மஹ்மூட் காலில்,நான் சுதந்திர பாலஸ்தீனத்திற்காகவும்.காசாவில் படுகொலையை முடிவிற்கு கொண்டுவருவதற்காகவும் குரல்கொடுத்தேன் என தெரிவித்துள்ளார்.

காசாவில் இனப்படுகொலை திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர்ஜனவரி மாதத்தின்யுத்த நிறுத்தம் தற்போது முடிவிற்கு வந்துள்ள நிலையில் காசாவில் உள்ள பெற்றோர் மிகச்சிறிய போர்வைகளை தொட்டிலில் அடைக்கின்றார்கள்.அவர்களின் முழுமையான சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபடுவது எங்களின் தார்மீக உரிமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

தனது முதல் குழந்தைக்காக காத்திருக்கும் எட்டுமாத கர்ப்பிணியான தனது மனைவியின் கண்முன்னால் தான்கைதுசெய்யப்பட்டதை விபரித்துள்ள அவர் இஎன்னை கைதுசெய்தவர்கள் பிடியாணையை வழங்க தவறினார்கள்.என்னை இலக்கத்தகடற்ற காரில் பலவந்தமாக ஏற்றினார்கள் என  குறிப்பிட்டுள்ளார்.

அந்தவேளை எனது ஒரேயொரு கரிசனையாக மனைவிநூர் அப்தல்லாவின் பாதுகாப்பு மாத்திரமே காணப்பட்டது என தெரிவித்துள்ள காலில் என்னை விட்டுவிட்டுசெல்ல மறுத்தமையால் எனது மனைவியை கைதுசெய்யப்போவதாக அவர்கள் மிரட்டினார்கள் இதனால் எனது மனைவியையும் கைதுசெய்வார்களா என தெரியாத நிலையிலிருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் நியுஜேர்சியில் உள்ள ஐசின் தடுப்புநிலையமொன்றிற்கு கொண்டு சென்றவர்கள் பின்னர் அவரை 1400 மைல் தொலைவில் உள்ள லூசியானா தடுப்பு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

தனது முதல் நாள் படுக்கை விரிப்பு கூட இல்லாமல் நிலத்தில் உறங்கினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு நான் குளிர்மிகுந்த காலைகளில் கண்விழிக்கின்றேன்.சட்டத்தின் பாதுகாப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பலருக்கு எதிராக இழைக்கப்படும் அமைதியான அநீதிகளிற்கான சாட்சியங்களை நாள்முழுக்க பார்க்கின்றேன் . உரிமைகளிற்கான உரிமைகள் உள்ளவர் யார்? இந்த சிறைக்கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள பெருமளவு மனிதர்களிற்கு உரிமைக்கான உரிமையில்லை.நான் பார்த்த செனெகலை சேர்ந்த நபர் ஒரு வருடகாலமாக  சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் உள்ளார். அவருக்கு உரிமைக்கான உரிமையில்லை.அவரது சட்ட நிலை முடங்கிய நிலையில் உள்ளது அவரது குடும்பத்தினர் ஒரு சமுத்திரத்திற்கு அப்பால் உள்ளனர்இந்த நாட்டில் தனது ஒன்பது வயதில் காலடி எடுத்துவைத்த  21 வயது நபர் ஒருவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.