காட்டு யானையை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்து பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் அவரது வீட்டுக்கு அருகாமையில் வைத்தே இலக்கு தவறிய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
தம்மின்ன ஹண்டியா கிராமத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தடன் தொடர்புடைய சந்தேக நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.