காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

0
442

குருணாகல் மீகலேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உஸ்கலசியம்பலங்குவ பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி கல்முவ பிரதேசத்தை சேர்ந்த 38 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

பயிர்ச்செய்கைகளை நாசம் செய்வதற்காக வந்த காட்டு யானையை விரட்டுவதற்கு முயற்சித்த போதே குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்று பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் மீகலேவ வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.