25 C
Colombo
Monday, November 11, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைக்காக குரல் கொடுப்போம் – எரான் விக்கிரமரட்ண

யுத்தம் நடந்த பிரதேசத்தில் காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கபடவில்லை. அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

யாழ். நகரின் தீவு பகுதியியின் போக்குவரத்து, மக்களின் கல்வி நிலை அடிப்படை வசதிகளில் ஒன்றான தண்ணீர் பிரச்சினை இன்றும் இந்த ஆட்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

யுத்தம் நடந்த பிரதேசம் காணாமலாக்கபட்டவர் பிரச்சினை தொடர்பில் இங்கு எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கபடவில்லை. அதன் அடிப்படையில் நாம் தொடர்ந்து அதற்காக குரல் கொடுப்போம்.

 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைபடுத்துவோம். நாட்டிலுள்ள சட்டத்தினை நடைமுறைபடுத்துவது இவ்வளவு பிரச்சினையாக இருந்தால் அதனை நிச்சயமாக நாம் நடைமுறைபடுத்துவோம்.

எமது தலைவர் சஜித் பிரேமதாச அதனை நிச்சயம் முன்னெடுப்பார். இப்பொழுது ஏகாதிபத்திய அரசு இருக்கிறது. ஜனாதிபதியின் கையில் அதிகாரம் உள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் காணி பொலிஸ் அதிகாரம் என நடைமுறைபடுத்த உள்ளோம்.

அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் 13 ஆவது திருத்த சட்டத்தினை நடைமுறைபடுத்துவதாக கூறியுள்ளார்கள். இதனை நாம் வரவேற்கின்றோம். அவர்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு சுமார் 35 வருடங்கள் எடுத்துள்ளது.

35 வருடங்களின் பின்னர் ஜேவிபி தற்பொழுது 13 ஆவது திருத்தத்தின் இது  முன்வந்தது போல பல இனவாத குழுக்களினை சேர்நதோரும் எதிர்காலத்தில் முன்வருவார் என மேலும் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles