காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் யாழில் போராட்டம்!

0
114

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக இன்று  காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.