காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி மன்னாரில் போராட்டம்

0
129

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில், இன்று காலை 10.00 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.