வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இலங்கை தொழிலாளர் கட்சியில் கங்காரு சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
இந்தநிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் இன்று காலை அவர் வேட்புமனுவினை தாக்கல் செய்தார். இதன்போது கட்சியின் வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் வருகைதந்திருந்தனர்.