காத்தான்குடியில் இன ஐக்கிய மீலாதுன்
நபி விழா நடைபெற்றது

0
248

மட்டக்களப்பு காத்தான்குடியில் இன ஐக்கிய மீலாதுன் நபி விழா இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலீம்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மௌலவி எச்.எம்.ஸாஜஹான் தலைமையில் இந்த இன ஐக்கிய மீலாதுன் நபி விழா நடைபெற்றது.

மீலாதுன் நபி தினத்தையொட்டி நடைபெற்ற இவ் விழாவின் ஆரம்ப நிகழ்வாக காத்தான்குடி பிரதான வீதியில் மீலாத் ஊர்வலமொன்று இடம் பெற்றது.காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திலிருந்து பிரதான வீதி வழியாக சென்று மீண்டும் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தை அடைந்தது.
இந்த விழாவில் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலீம்கள் அமைப்பின்; தலைவர் மௌலவி எச்.எம்.ஸாஜஹான் உட்பட சிரேஷ்ட உலமாக்கள் சிலர்; கௌரவிக்கப்பட்டதுடன் மீலாத் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.இந்த விழாவில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப்பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எஸ்.உமர்மௌலானா கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட பல்;சமய ஒன்றியத்தின் தலைவர் சிவசிறி சிபாலன் குருக்கள் எஹெட் கரிட்டாஸ் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜேசுதாஸன் மட்டக்களப்பு மாவட்ட பல்;சமய ஒன்றிய இணைப்பாளர் கிறிஸ்டி உட்பட பல்சமய பிரமுகர்கள், உலமாக்கள் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மாணவர்களின் ஹஸீதா பேச்சு கவிதை இஸ்லாமிய பாடல் போன்ற பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன.