காத்தான்குடியில் வீடுகளுக்கு சென்று மூன்றாவது தடுப்பூசி ஏற்றல்

0
157

மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில். கொவிட் தடுப்பூசி மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி வீடுகளுக்கு சென்று போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்; வீதிகள்pல் கொவிட் தடுப்பூசி அட்டை பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சுகுணனின் வழிகாட்டலின் பேரில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸ்ருதீன் தலைமையில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிசாரின் உதவியுடன் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் தாதியர்கள் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி அட்டையை பரிசோதனை செய்வதுடன் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாவர்களுக்கு அவ்விடத்திலேயே தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதேவேளை காத்தான்குடி ஊர் வீதியில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் பஷீர் மேற்பார்வையில் வீதிகளில் செல்கின்றவர்களிடமும் தடுப்பூசி அட்டை பரிசோதனை செய்யப்படுவதுடன் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத வர்களுக்கு அவ்விடத்திலேயே தடுப்பூசியை போடவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.