காத்தான்குடியை சேர்ந்த மீரா சாஹிப்
முபாரக் கரை திரும்பவில்லை

0
166

மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் இது வரை கரைக்கு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி கர்பலா பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய மீரா சாஹிப் முபாரக் எனும் மீனவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது சிறிய(படகு) தோனியின் மூலம் காத்தான்குடி புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் முன்பாகவுள்ள கரையிலிருந்து மீன்பிடிக்க சென்றுள்ளார்

எனினும், மீன் பிடிக்கச் சென்றவர் கரைக்கு வரவில்லை என அப்பகுதி மீனவர்களும் அவரின் குடும்ப உறவினர்களும் தெரிவிக்கின்றனர்வழமையாக மாலை வேளையில் கடலுக்குச் செல்லும் இவர் அதிகாலை கரைக்கு திரும்பி விடுவார் எனவும் ஆனால் ஞாயிற்றுக்கிழமை மாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இவர் இன்று திங்கட்கிழமை பிற்பகல் வரை கரைக்கு வரவில்லை எனவும் அவரின் குடும்ப உறவினர்களும் அப்பகுதி மீனவர்களும் தெரிவிக்கின்றனர்

இது தொடர்பாக காத்தான்குடி போலீசாருக்கும் இலங்கை கடற்படையினருக்கும் தெரியப்படுத்தி உள்ளதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்குறித்த நபரைத் தேடும் முயற்சியில் இலங்கை கடற்படையினரர் ஈடுபட்டுள்ள அதேவெளை, தொடர்பாக காத்தானாகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது