காரைதீவில் சமூர்த்தி பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கல்

0
180

அம்பாறை மாவட்டம் காரைதீவில் சமூர்த்தி பயனாளிகளுக்கான கடனுதவி வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்குதலுக்கு மத்தியில் காரைதீவு சமூர்த்தி வங்கியானது அரசாங்கத்தினுடைய பொருளாதாரக் கொள்கையினை அபிவிருத்தி செய்யும் நோக்குடன்காரைதீவு சமூர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.எஸ்.சதீஸ் தலைமையில் சமூர்த்தித் திணைக்களத்தினால் புதிய முயர்ச்சியாளர்களுக்கு சமூர்த்தி கடனுதவிகள் வழங்கப்பட்டது. சுமார் 20 இலட்சம் ரூபாய் இதன்போது சமுர்த்தி பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயளாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்ததுடன் நிகழ்வில காiதீவு பிரதேச செயலக தலைமைப் பீடமுகாமையாளர் ஏ.எச்.அச்சுமுகம்மட், முகாமைத்துவப்பணிப்பாளர் எம்.மதியழகன், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஏ.எம்.பஹ்மி கலந்து கொண்டனர்.