28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காற்று சுழற்சி இலங்கைத்தீவுக்கு அண்மையில்!

இலங்கைத் தீவுக்கு தெற்காக நகரும் காற்று சுழற்சி காரணமாக கடந்த 28ஆம் திகதி முதல் பல பாகங்களில் மழை காலநிலை நீடித்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஆனால் அந்த காற்று சுழற்சியின் நகர்வு தாமதம் காரணமாக கடந்த 29ஆம் திகதி முதல் சற்று கனத்த மழை பெய்தது.தற்போது இந்த காற்று சுழற்சி இலங்கையின் தெற்காக நகர்ந்து கொண்டிருக்கின்றது.காற்று சுழற்சி நகர்ந்து சென்ற பின் பெரும்பாலும் இன்று முதல் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அதன் பின்னர் சில நாட்களுக்கு பெரும்பாலும் சீரான காலநிலையே நீடிக்கும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மீண்டும் ஒரு காற்று சுழற்சி எதிர்வரும் 13, 14, அல்லது 15ஆம் திகதியளவில் இலங்கைத் தீவுக்கு அண்மையாக வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles