காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்த தமிழக மீனவர்கள்!

0
6

இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே நேற்று நடைபெற்ற அவசர மீனவ ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது. மன்னார் கடற்பரப்பில் நேற்று அதிகாலை 32 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதைத் தடுத்து படகுகளை மீட்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.