காலியிலும் துறைமுகநகர் அமைக்க திட்டம்!

0
187

கொழும்பு துறைமுக நகரத்துக்கு நிகரான அபிவிருத்தி வலயமொன்றை காலி துறைமுகத்துக்கு அருகில் நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டு வருவதாக துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபயகுணவர்தன தெரிவித்துள்ளார்.
காலி துறைமுகத்தில் 40 ஏக்கர் நிலப்பரப்பை கடலில் உருவாக்கி இந்த துறைமுக நகரத்தை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், அங்கு வர்த்தக நிலையங்கள் மற்றும் ஹோட்டல் ஆகிய சுற்றுலா வேலைத்திட்டத்துக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.