அவுங்கல்ல – மித்தரமுல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த 29 வயதானவர், பலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பெலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.