இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் மலைப்பகுதியில் உள்ள கால்பந்தாட்ட மைதானம் மீது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் சிறுவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலை லெபனானின் ஹெஸ்புல்லா கெரில்லா அமைப்பு நடத்தியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டியுள்ளது.எனினும், இந்தக் குற்றச்சாட்டை ஹிஸ்புல்லா அமைப்பு மறுத்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் பதிலடி கொடுத்துள்ளார்.இதன் காரணமாக இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.