பிங்கிரிய – போவத்த – கொலமுனஓயா கால்வாய்க்கு அடியிலிருந்து உந்துருளி மற்றும் எலும்பு துண்டுகள் சில பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் உந்துருளியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
உந்துருளியின் உரிமையாளர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உந்துருளியை சோதனையிட்ட போது அதற்கு அருகில் மனித மண்டை ஓடும், சில எலும்பு துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், குறித்த உந்துருளி தனது மகனுடையது என முறைப்பாடு அளித்திருந்த பெண் அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.