காவற்துறையினர் எனக் கூறி வர்த்தகரின் வீட்டில் கொள்ளையிட்ட நபர் கைது!

0
147

காவற்துறையினர் எனக் கூறி கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் குறித்த வர்த்தகரின் வீட்டிற்குள் நுழைந்த சிலர் காவல்துறையினர் என தங்களை அறிமுகப்படுத்தியிருந்தனர்.

சந்தேகநபர்கள் காவல்துறை பயன்படுத்தும் கைவிலங்கை காண்பித்து இந்த கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, இரண்டு கோடி ரூபா பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.