வாத்துவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒருவர் காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்ததாகத் தெரிவித்து அவரது உறவினர்களும் பிரதேச மக்களும் குறித்த காவல்நிலையத்துக்கு முன்பாக நேற்றிரவு எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
வாத்துவ – தல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். குறித்த நபர் வாகன விபத்தொன்று தொடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.