பாகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீனா சார்பில் அந்த நாட்டின் பிரதமர் லீ கியாங் பங்கேற்றார். அதன்பின்னர் இஸ்லாமாபாத் பயணம் தொடர்பாக சீனா-பாகிஸ்தான் இணைந்து கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளன.
கூட்டறிக்கையில் காஷ்மீர் பிரச்சனையும் இடம் பெற்றுள்ளது.
தெற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தையும், நிலுவையில் உள்ள அனைத்து சர்ச்சைகளுக்கும் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும், ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்கும் எதிர்ப்பை தெரிவிக்க இருநாடுகளும் உறுதி தெரிவித்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் பிரச்னை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம், இருதரப்பு ஒத்துழைப்புக்கு இணங்க முறையாகவும், அமைதியாகவும் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீரில் இந்திய அரசாங்கம் அரசு 2019 ஆகஸ்ட் மாதம் இரத்து செய்த 370 வது பிரிவை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், மறைமுகமாக குறிப்பிட்டுள்ளது.
இதனால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு, சீனா நேரடி ஆதரவை வழங்கி உள்ளது.
காஷ்மீரை 2 யூனியன் பிரதேசமாக பிரித்ததற்கு பாகிஸ்தானும், லடாக்கை யூனியன் பிரதேசமாக அமைப்பதற்கு சீனாவும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.