28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காஸாவுக்கான நிவாரணக் கப்பல் சென்றடைவு!

போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவுக்கு கடல் வழியாக அனுப்பட்ட முதல் நிவாரணக் கப்பல் அப்பகுதியை நேற்று சென்றடைந்தது.

காஸாவுக்கு தரை வழியாகவும், வன்வழியாகவும் மட்டுமின்றி கடல் வழியாகவும் நிவாரணப் பொருள்களை அனுப்ப அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, பிரபல அமெரிக்க சமையல் கலை வல்லுநர் ஜோஸ் ஆண்டர்ஸின் ‘வேர்ல்டு சென்ட்ரல் கிச்சன்’ (டபிள்யுசிகே) அறக்கட்டளையால் சேகரிக்கப்பட்ட 200 டன் உணவுப்பொருள்களுடன் சைப்ரஸின் லார்னாகா துறைமுகத்திலிருந்து கப்பலொன்று கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.

ஐரோப்பிய யூனியனின் அனுமதியுடன் ஸ்பெயின் நாட்டின் ‘ஓப்பன் ஆர்ம்ஸ்’ சேவை அமைப்பு அக்கப்பலை அனுப்பியது. கடந்த 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவிலிருந்து காஸாவுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல ஆணையம் அனுமதி வழங்கியது அதுவே முதல்முறையாகும்.

இந்த நிலையில், 4 நாள் பயணத்துக்குப் பிறகு அக்கப்பல் காஸா கடலோரப் பகுதியை நேற்று சென்றடைந்தது.

அந்தக் கப்பல் இழுத்து வந்த நிவாரணப் பொருள்கள் தரையிறக்கப்பட்டவுடன் அவை எவ்வாறு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என்ற முழு விவரம் துவரை வெளியாகவில்லை. 

இது தவிர காஸா மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக இன்னும் சில நாள்களில் மேலும் ஒரு கப்பல் அனுப்பப்படும் என்று ‘வேர்ல்டு ஃபுட் கிச்சன்’ (டபிள்யுசிகே) அறக்கட்டளை கூறியுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles