காஸா மக்களுக்கு ஜேர்மனி நிதியுதவி!

0
127

காஸா மக்களுக்கு ஜேர்மனி 50 மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக வழங்க முடிவுசெய்துள்ளதாக ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு நாடுகளும் மனிதாபிமான நிதியுதவியை வழங்க முன்வந்துள்ள நிலையில் ஜேர்மனியும் இதில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், ஜேர்மனி மருத்துவக் குழுக்களையும் காஸா பகுதிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

‘எங்கள் செய்தி தெளிவானது. நாங்கள் அப்பாவி பாலஸ்தீனிய தாய்மார்கள், தந்தைகள் மற்றும் குழந்தைகளை கைவிட மாட்டோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.