காஸாவில் கடந்த இரு நாட்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து காஸாவில் கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
40 ஆயிரத்து 939 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 94 ஆயிரத்து 616 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


