கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்த சிறுமியின் வீட்டில் ஆழ் துளைக்கிணறு!

0
161

யாழ்ப்பாணம் – மிருசுவில் வடக்கு மிருசுவில் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து மரணமடைந்த சிறுமியின் வீட்டிற்கு, மிருசுவில் மக்களால் ஆழ் துளைக்கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுமி வீழ்ந்து மரணமடைந்த பாதுகாப்பற்ற கிணறு இளைஞர்களால் இடித்து மணல் நிரப்பி மூடப்பட்டது.

இளைஞர்களால், ஊர் மக்களின் நிதி உதவியை பெற்று குழாய்க்கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டமை ஒரு முன்னோடியான செயற்பாடாகும் என பலரும் பாராட்டி வருகின்றனர்.