கிராமத்துடன் கலந்துரையாடல் இன்று மாத்தறையில்

0
336

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பங்கேற்கும் கிராமத்துடன் கலந்துரையாடலின் 16ஆவது நிகழ்ச்சித் திட்டம் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபத்த பிரதேச செயலக பிரிவிலுள்ள கிரிவெல்கெல வடக்கு மூன்றாம் பியவர கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று (27) நடைபெறவுள்ளது.

தேரங்கல மகா வித்தியாலத்தில் காலை பத்து மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும். இதில் மக்கள் பிரதிநிதிகள் அமைச்சர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், மற்றும் அதிகாரிகளும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். தென் மாகாணத்தில் இடம்பெறும் இரண்டாவது கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டம் இதுவாகும்.