கிராம சேவகர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.
இதனிடையே கிராம உத்தியோகத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சங்கங்களும் பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
கிராமசேவையாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மரதநகரில் கிராம உத்தியோகத்தர் அலுவலகம் மூடப்பட்டிருந்தது.