கிரிபத்கொட நகரத்தில் திடீர் சுற்றிவளைப்பு – இருவர் கைது

0
15

கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிபத்கொட நகரத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த இரு வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். 

கைதான முதலாவது சந்தேகநபரிடம் இருந்து 101 கிராம் 180 மில்லிகிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. 

இந்நிலையில், இரண்டாவது சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 427 கிராம் 530 மில்லிகிராம் குஷ் போதைப்பொருள், 1 கிலோ 141 கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் 1,250,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிரிபத்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் இருவர் 24 வயதுடைய களனி மற்றும் களுத்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.